மதுரை முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் புனரமைப்பு பணியில் நிதி மோசடி: 5 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை: மதுரையில் முல்லை பெரியாறு பாசன கால்வாய் புனரமைப்பு பணியில் நிதி மோசடி செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்ட விவசாயிகள் முல்லை பெரியாறு அணையை நீராதாரமாகக் கொண்டு பாசனம் செய்து வருகின்றனர். இதில் கடைமடை பகுதியான மேலூர் மற்றும் வாடிப்பட்டி பகுதியில் உள்ள முல்லை பெரியாறு பாசனக்கிளை கால்வாய்களை ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் மராமத்து பணியை முறையாக மேற்கொள்ளாமல் நிதியை முறைகேடாக கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. சுமார் ரூ.3 லட்சம் நிதியை அதிகாரிகள் ஒப்பந்தக்காரருடன் இணைந்து முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளராக பணியாற்றிய சாலமன் கிறிஸ்துதாஸ், உதவி செயற்பொறியாளர் முகேசன், நிர்வாக பொறியாளர் பிரபு, கண்காணிப்பு பொறியாளர் முருகசுப்பிரமணியம், ஒப்பந்ததாரர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.     

Related Stories: