மது குடித்தல், உண்ணுதல் தலைப்பில் பிரத்யேக முதுநிலை பட்டப்படிப்பு!: பிரான்சின் போ லில்லி பல்கலை. அறிமுகம்..!!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று மதுபானங்கள் உண்ணுதல் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆகிய பிரிவுகள் அடங்கிய முதுநிலை படிப்பை தொடங்கி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. பிரான்சில் உள்ள மிகசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று போ லில்லி. இங்கு தான் மது உள்ளிட்ட பானங்கள், உணவு பழக்கம் மற்றும் முறையான வாழ்க்கை முறை ஆகியவற்றில் கல்வியை தொடர விரும்புவோருக்கு என்று பிரத்யேகமாக முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அறிவியல் பிரிவின் கீழ் பி.எம்.வி. என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முதுகலை பிரிவு உணவுகள், மது உள்ளிட்ட பானங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய பரந்த தலைப்புகளை உள்ளடக்கியது என நியூயார்க் போஸ்ட் இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

வழக்கத்திற்கு மாறான இந்த பாடத்திட்டத்தில் உணவு தொழில்நுட்பம், இறைச்சிக்கான தாவர மாற்ற உணவுகள், விவசாயத்தின் வரலாறு, சமயலறையில் பாலின பாகுபாடு உள்ளிட்ட தலைப்புகளும் இடம் பெற்றுள்ளன. இது தவிர உணவு மற்றும் பானங்கள் பற்றிய மாநாடுகளில் மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர் பினிட் தெரிவித்துள்ளார். இந்த கவர்ச்சிகரமான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது முதலில் மாணவர்கள் ஏளனம் செய்ததாக கூறும் பினிட், இந்த ஆண்டு 15 மாணவர்கள் பி.எம்.வி. பாடப்பிரிவில் சேர்ந்து பயின்று வருவதாக கூறியுள்ளார்.

Related Stories: