குன்னூர் சுற்றுலா தலங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க 9 சிறப்பு குழு

குன்னூர் :  ஒமிக்ரான் தொற்று எதிரொலியாக குன்னூரில் சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வருவாய் துறையினர் சார்பில் 9 குழு அமைத்து முகக்கவசங்கள் அணியாமல் வரும் நபர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று காரணமாக  தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகிறது. பொது மக்கள் கூடும் இடங்கள், நிகழ்ச்சிகள்  நடைபெறும் இடங்களில் முகக்கவசங்கள் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்தவும் அறிவுறுத்தி வருகின்றது.

 நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தி வருகின்றனர்.குன்னூர் வருவாய் துறையினர் சார்பில் 9 சிறப்பு குழுக்கள் அமைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில்  முகக்கவசங்கள் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகள் காலை முதல் மாலை நடைபெறுகிறது.

Related Stories: