கடலூர் அருகே முந்திரி மதிப்பு கூட்டும் இயந்திர கண்காட்சி!: அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் தொடங்கி வைத்தனர்..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரி விளைச்சலை ஊக்குவிக்கும் நோக்கில் முந்திரி மதிப்பு கூட்டும் எந்திரங்களின் கண்காட்சி நடைபெற்றது. பண்ருட்டி அருகே காட்டாம்புளியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் முந்திரி ஏற்றுமதி அதிகரித்து வேலை வாய்ப்பு பெருகும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கண்காட்சியில் வணிகம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கான அரங்குகள், அரசின் திட்டங்களை விளக்கம் அளிக்க தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொழில் முனைவோருக்கு இந்த கண்காட்சி பெரிதும் உதவும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: