தென் ஆப்ரிக்கா நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ

கேப்டவுன்: தென் ஆப்ரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்ஆப்ரிக்கா நாட்டில் கேப்டவுனில் இந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடம் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்து கரும்புகை மண்டலம் உருவானது. உடனே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்னர். நாடாளுமன்ற கட்டிடத்தின் கூரை பகுதிகள் தீயில் எரிந்து இடிந்து விழுந்தன. மேலும், அக்கட்டிடத்தில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களுக்கும் தீ பரவியது. இது குறித்து அந்நாட்டின் பொதுப்பணித் துறை அமைச்சர் பாட்ரிசியா டி லில்லி கூறுகையில், ‘இது ஜனநாயகத்துக்கு மிகவும் சோகமான நாள், நாடாளுமன்றம் நமது ஜனநாயகத்தின் வீடு. விடுமுறை என்பதால் அரசு அலுவலகம் மூடப்பட்டிருந்தது. எனவே, உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 6 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,’ என்றார்.

Related Stories: