குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்?.. விசாரணை அறிக்கை அடுத்த வாரம் தாக்கல் என தகவல்

குன்னூர்: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி: குன்னூரில் கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி, உயர் ராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து விமானப்படையை சேர்ந்த ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையிலான முப்படை நிபுணர் குழு விசாரித்து வருகிறது. இக்குழு தனது விசாரணையை முடித்து விட்டது.

விமானப்படை தளபதி சவுதாரியிடம் அடுத்த வாரம் இது தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. பனி மூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழுந்து, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் எந்தவித தொழில்நுட்ப குறைபாடும் இல்லை. ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியில் இருந்த தகவல்கள், விபத்து நேர்ந்த இடத்தில் கிடைக்கப்பெற்ற தடயங்கள், நேரில் கண்டோர் அளித்த சாட்சியங்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும்  கூறப்படுகிறது.

Related Stories: