கொளத்தூர் தொகுதியில் வீடு, வீடாக திமுக உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

பெரம்பூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவிக.நகர் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கிவைத்தார். முதலில் 5 பேரிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் படிவங்களை பெற்றுக்கொண்டு உறுப்பினர் சேர்க்கையை துவக்கிவைத்து அவர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். இதில் இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து திருவிக.நகர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முதல்வர் நடந்து சென்று உறுப்பினர் படிவத்தை வழங்கினார். அப்போது பூர்த்தி செய்து கொடுத்த விண்ணப்பங்களையும் முதல்வர் பெற்றுக்கொண்டார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: