1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்; பழிதீர்க்க இங்கிலாந்து ராணியை கொல்வேன்: வீடியோ வெளியிட்டவர் குறித்து போலீஸ் விசாரணை

லண்டன்: கடந்த 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு பழிதீர்ப்பதற்காக இங்கிலாந்து ராணியை கொல்வேன் என்று வீடியோ வெளியிட்டவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்து நாளிதழ் ஒன்றில் சமூக வலைதளத்தில் வௌியான வீடியோ தொடர்பான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ கிளிப்பில் முகமூடி அணிந்த  ஒருவர் கையில் ஆயுதத்தை ஏந்தியபடி பேசுகிறார். ஸ்னாப்சாட்டில் வெளியான இந்த வீடியோ காட்சிகளில் பேசும் ஒருவர், தன்னை இந்திய சீக்கியர் சமூகத்தை சேர்ந்த ஜஸ்வந்த் சிங் சாய்ல் என்று கூறுகிறார்.

மேலும் கடந்த 1919ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை கண்டிக்கும் வகையில், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை (95) கொலை செய்யப் போகிறேன் என்று அச்சுறுத்தி உள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பிரிட்டனின் ஸ்காட் யார்டு போலீசார் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ட்சர் அரண்மனைக்குள் கையில் அம்பு மற்றும் வில்லுடன் அத்துமீறி நுழைந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் சற்று மனநிலை தொடர்பான பிரச்னையில் இருப்பவர் என்பது தெரிந்தது. இருந்தும், அவரை மனநலப் பரிசோதனை செய்த போலீசார் மனநலச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவரை கைது செய்து மருத்துவர்களின் பராமரிப்பில் வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்திய சீக்கியர் என்று பெயரில் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: