ஒமிக்ரான், பறவைக் காய்ச்சல் எதிரொலி பொள்ளாச்சி-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

பொள்ளாச்சி : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையிலும், மாநில எல்லைகளில் வாகன கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில், பறவைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு  தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதில், குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக கேரளா செல்லும் முக்கிய வழித்தடங்களான, மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், கோபாலபுரம், நடுப்புணி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி அதில் வருபர்களை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், இருந்தால் மட்டுமே அதில் வருபர்களைதமிழகத்துக்குள் அனுமதித்து வருகின்றனர்.

இந்த ஆவணங்கள் இல்லாத வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் கேரளாவில் பலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக கேரள எல்லைகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: