அடுத்தடுத்து டிவிட்களை வெளியிட்டு கிண்டல் கிறிஸ்துமஸ் தாத்தாவை வைத்து மோடியை விமர்சித்த காங்கிரஸ்

புதுடெல்லி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்துமஸ் மையக்கருத்துகளை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் சில சிறப்பு டிவிட்களை நேற்று டிவிட்டரில் பதிவிட்டது. அதில், கிறிஸ்துமஸ் தாத்தாவான சான்டா கிளாஸ் பனிச்சரக்கு வண்டியில் போகும் படத்தை பதிவிட்டு, ‘நல்லவேளை, சான்டா கிளாஸ் பனிச்சரக்கு வண்டியில் பயணம் செய்கிறார். எனவே, பெட்ரோலுக்காக அவர் அதிகப்படியான பணத்தை செலவிட வேண்டிய அவசியமில்லை’ என விமர்சனங்கள் எழுதப்பட்டுள்ளன. அதோடு, ‘கற்பனை செய்து பாருங்கள், லிட்டருக்கு ரூ.95 விலையில் பனியில் சவாரி செய்தால் எப்படியிருக்கும்?’ என்றும் கூறி உள்ளது.

அதோடு, ‘நல்லவேளை சான்டா கிளாஸ் அனைவரின் விருப்பங்களையும் கேட்கிறார். மோடியோ அவர் மனதின் குரலை மட்டும் கேட்கிறார். இந்த கிறிஸ்துமசில் நாங்கள் விரும்புவது செவிசாய்க்கும் அரசாங்கம்’ என மற்றொரு பதிவில் கூறி உள்ளது. ‘சான்டா கிளாஸ் அனைவருக்கும் பரிசுகளை தருகிறார். ஆனால் மோடியோ அவரது பணக்கார நண்பர்களுக்கு மட்டும் பரிசுகளை வழங்குவதில் தீவிரமாக இருக்கிறார். ஜிங்கில் பெல்ஸ், ஜிங்கில் பெல்ஸ்… துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள், ரயில்வே.. இவை மோடி விற்ற சில பொருட்கள் மட்டுமே’ என்றும் கிண்டலாக டிவிட்கள் போடப்பட்டுள்ளன. இந்த டிவிட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: