எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சென்னங்காரணி ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க 2 இடங்களில் அமைப்பது, மாகரல் பகுதியில் புதிய பைப்லைன் அமைத்தல் பணி என ரூ.36 லட்சத்து 22 ஆயிரத்து 238 ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், வெங்கல் ஊராட்சியில் கால்வாய் அமைத்தல் பணி, சேத்துப்பாக்கம், தாமரைப்பாக்கம் ஊராட்சிகளில் கால்வாய் அமைப்பது, கோடுவெளி, திருநிலை, அக்கரப்பாக்கத்தில் கழிவறை கட்ட ரூ.36 லட்சத்து 22 ஆயிரத்து 237 ஒதுக்கீடு செய்யப்பட்டது. அழிஞ்சிவாக்கம், நெய்வேலி,  திருக்கண்டலம், பூச்சி அத்திப்பேடு, ஆத்துப்பாக்கம், ஆலப்பாக்கம், குமரப்பேட்டை ஊராட்சிகளில் பேவர் பிளாக் மற்றும் தார்ச்சாலை பணிக்காக ரூ.48 லட்சத்து 29 ஆயிரத்து 650 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சத்து 74 ஆயிரத்து 125 செலவில் பல்வேறு பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதில் திமுக கவுன்சிலர்கள் கோகிலா, குணசேகரன், சுரேஷ், அதிமுக கவுன்சிலர்கள் குழந்தைவேல், சரவணன், லதா அசோக் கலந்துகொண்டனர்.   

Related Stories: