வாணியம்பாடி அருகே தொடர் மழையால் சேதமான தமிழக- ஆந்திர மலைப்பகுதியில் அதிகாரிகளுடன் கலெக்டர் திடீர் ஆய்வு: சாலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

வாணியம்பாடி:  வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையையொட்டி உள்ள மலைப்பகுதியில் துண்டிக்கப்பட்ட சாலை குறித்தும், சீரமைப்பு பணிகள் குறித்தும் கலெக்டர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது எல்லையோர கிராமங்கள். இந்நிலையில் தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம்  செல்லக்கூடிய  சாலையை,  வெலதிகமானிபெண்டா, ஆர்மணிபெண்டா பகுதி பொதுமக்கள் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக  பெய்த தொடர்  கனமழை காரணமாக வெலதிகமானிபெண்டா மலைப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு சாலை பழுது அடைந்தது.

இதனால் ஆந்திராவில் இருந்தும் தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கும் வருவதற்கான பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு பார்வையிட்டு  பணியை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று கலெக்டர் அமர் குஷ்வாஹா மலைப்பகுதிக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தி பணியை விரைவில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். உடன் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வனத்துறையினர் உட்பட பலர் என  அனைவரும் உடனிருந்தனர்.

Related Stories: