பச்சையாறு அணையிலிருந்து நாளை முதல் 31-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

நெல்லை: பச்சையாறு அணையிலிருந்து நாளை முதல் 31-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்கு பச்சையாறு அணையிலிருந்து 2021-2022-ம் ஆண்டு பிசான பருவ சாகுபடிக்கு நாள் ஒன்றுக்கு 100 கன அடிக்கு மிகாமல் 23.12.2021 முதல் 31.03.2022 வரை தண்ணீர்  திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில் 13 கிராமங்களிலுள்ள 9592.91 ஏக்கர் பாசனப்பரப்பு பயன்பெறும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Related Stories: