மீண்டும் தொலைபேசி ஒட்டுக்கேட்பதாக காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம்: ஒன்றிய அரசு விசாரணை நடத்த முடிவு..!

டெல்லி: தனது குழந்தைகளின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டிய நிலையில், ஒன்றிய அரசு தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசு பெகாசஸ் மென்பொருள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது குழந்தைகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், என்னுடைய குழந்தைகளின் சமூக வலைத்தள இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து பிரியங்கா தரப்பில் அதிகாரப்பூர்வ புகார் எதுவும் அளிக்காத நிலையில், ஒன்றிய அரசே தானாக முன்வந்து இந்த குற்றச்சாட்டை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொள்ள உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரியங்காவின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: