கிரீடம், மாலையுடன் பள்ளியில் ஆய்வு தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் கூடலூருக்கு அதிரடி மாற்றம்

தென்காசி: தென்காசி கல்வி மாவட்ட அலுவலராக இருப்பவர் சுடலை. இவர் கடந்த 14ம் தேதி கடையத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு வருடாந்திர ஆய்வுப் பணிக்கு சென்றார். அப்போது அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பூக்களால் ஆன கிரீடம் மற்றும் மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது. கிரீடம் மற்றும் மாலை அணிந்தவாறே அவர் பதிவேட்டில் கையெழுத்திடுவது போன்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. கடவுள் போல் அதிகாரியை சித்தரிக்கிறீர்கள் ஏன்? என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்நிலையில் கிரீடம், மாலையுடன் பள்ளியில் ஆய்வு நடத்திய மாவட்ட கல்வி அலுவலர் சுடலை நேற்று அதிரடியாக நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பிறப்பித்துள்ளார். தென்காசி புதிய மாவட்ட கல்வி அலுவலராக  (பொறுப்பு) செந்தூர்பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: