நெமிலி ஒன்றியத்தில் பழுதடைந்துள்ள அரசு பள்ளி கட்டிடங்களை இடிக்க வேண்டும்-மாணவர்களின் உயிர் காக்க பெற்றோர் கோரிக்கை

நெமிலி : நெமிலி ஒன்றியத்தில் பழுதடைந்துள்ள அரசு பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க  வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில்  அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி என 90க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை   8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழையின்போது  தொடர் கனமழை பெய்தது. இதில் நெமிலி ஒன்றியத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 40க்கும் மேற்பட்ட பழுதடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் உடனடியாக இடித்து அகற்ற வேண்டும்.இல்லையெனில் தற்போது பள்ளிகள் செயல்பட்டு வருவதால் பள்ளி மாணவ மாணவிகள் பாழடைந்த கட்டிடங்கள் அருகே செல்லும் நிலை ஏற்படும். இதனால் பள்ளி கட்டிடங்கள் மழைநீர் தேங்கி கட்டிடத்தின் மழைநீர்  ஊறி சிமென்ட் பூச்சுகள், உதிர்ந்து மாணவ மாணவிகள்  மேலே விழும்  ஆபத்தான நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது பயன்படுத்தப்படும் அரசு பள்ளி  கட்டிடங்கள் ஏற்கனவே விரிசல்கள் விட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் பயத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.தொடர் மழையின் காரணமாக தற்போது செயல்பட்டு வரும் பள்ளிகள் மேல் தளங்களில் மழை நீர் தேங்கி பள்ளி வளாகத்துக்குள் மழை நீர் சொட்டுகிறது. அதனால் செயல்படும் பள்ளி கட்டிடங்களையும் முறையாக உள்ளதா என ஆய்வு நடத்த   வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி மாணவ, மாணவிகளின் உயிரைக் காக்க உடனடியாக ஆய்வுகள் நடத்த வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: