ஆலப்புழாவில் தொடரும் அரசியல் கொலைகள்: எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி கொலையில் 2 ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கைது!!

கேரளா: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இரட்டை அரசியல் கொலைகள் நடந்திருக்கும் நிலையில் 2 ஆர்.எஸ்.எஸ்.  பிரமுகர்கள் உட்பட 6 பேர் போலீசில் சிக்கியிருக்கிறார்கள். கடந்த 18 ஆம் தேதி ஆலப்புழாவில் 38 வயதான வண்ணஞ்சேரியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் கே.எஸ். ஷான் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது பைக் மீது காரை மோதச்செய்த 4 பேர், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தவுடன் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.

இந்த கொலை நடந்த 12 மணி நேரத்தில் பா.ஜ.க. வின் ஓ.பி.சி. பிரிவை சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரை மறுநாள் அதிகாலையில் சிலர் அவருடைய வீட்டிற்குள் புகுந்து வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால்  ஆலப்புழாவில் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையியில் எஸ்.பி.பி.ஐ. மாநில செயலாளர் கொலையில் 10 பேருக்கு தொடர்பு இருப்பதாக சிறப்பு தனிப்படையினர் கூறியிருக்கிறார்கள்.

 அவர்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலையில் 12 பேர்  தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அதில் 4 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கொலைகள் அதிக அளவில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Stories: