பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய கூறல் மீன்..! கடும் போட்டி போட்ட மீன் வியாபாரிகள்

பாம்பன்: பாம்பன் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பினர். மீனவர்களின் வலையில் பாறை, கட்டா, விலைமீன், நண்டு, திருக்கை என பல வகையான மீன்கள் சிக்கிருந்தது. இதில் முண்டங்கண்ணி என அழைக்கப்படும் மீன் அதிகளவு கிடைத்தது.

இந்நிலையில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அதிர்ஷ்டமாக சிக்கும் கூறல் மீன் ஒருவரின் வலையில் சிக்கி இருந்தது. இது வெளிநாடுகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்ற மீன்களை விட இதற்கு பெரும் விலை மதிப்பு உண்டு. அதனால் மீனவர்கள் இதை லக்கி என அழைப்பர்.

சிக்கிய மீனை வாங்கிச் செல்ல வியாபாரிகள் போட்டி போட்டனர். ஏலத்தில் கூறல் மீன் கிலோ ஆயிரத்துக்கு விற்பனையானது.  மீனவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்ட இந்த மீனை வியாபாரி ஒருவர் 15 கூறல் மீனை ரூபாய் ஒரு லட்சத்திற்கு வாங்கி சென்றனர். சீசனில் முதலில் சிக்கிய மீன் என்பதால் பாம்பன் விசைப்படகு மீன்பிடித் துறைமுகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: