தமிழகத்தில் கூடுதலாக 8 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி தெரிய வந்துள்ளது; சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.!

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக 8 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி தெரிய வந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதிப்படுத்தினார்.  நைஜீரியாவில் இருந்து வந்த அந்த நபரோடு தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கு புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஒமிக்ரான் உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகளும் பரிசொதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு ஒமிக்ரான் உறுதியான நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு S வகை திரிபு கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, காங்கோவில் இருந்து தமிழகம் வந்த பெண்ணிற்கும் S வகை திரிபு உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.  இதனால், தமிழகத்தில் கூடுதலாக 8 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி தெரிய வந்துள்ளது.  பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: