பப்ஜி மோகத்தால் சொந்த வீட்டில் ரூ. 8 லட்சம் திருடிய சிறுவர்கள்: அதிர்ச்சியில் பெற்றோர்!!..

சென்னை: சென்னையில் பப்ஜி  விளையாடுவதற்காக பெற்றோருக்கு தெரியாமல் சிறுவர்கள் 8 லட்சம் ரூபாய் பணத்தை திருடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனாம்பேட்டை பகுதியில் மளிகை கடை நடத்திவருபவர் நடராஜன். இவரது ஒரு மகன் 10 ஆம் வகுப்பும், மற்றொரு மகன் 12 ஆம் வகுப்பும் வருகின்றனர். நடராஜன் வீடு வாங்குவதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து மகன்களை விசாரித்து உள்ளார்.

பப்ஜி  விளையாடுவதற்காக 8 லட்சம் பணத்தை திருடியதை சிறுவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடராஜன்  அளித்த புகாரின் பேரில் சிறுவர்களின் நண்பன் மற்றும் அவனது பெற்றோர் ராஜசேகர், மெரிட் ஆகியோர் மீது  நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதால், மிரட்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜசேகர் என்பவர் வணிகவரித் துறையில் இடைநிலை உதவியாளராக பணியாற்றுவது தெரியவந்தது.

Related Stories: