உலக பிரசித்திபெற்ற முத்துப்பேட்டை தர்காவில் கந்தூரி விழா: ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உலக பிரசித்திபெற்ற முத்துப்பேட்டை தர்காவில் நடைபெற்ற 720 ஆம் ஆண்டு கந்தூரி விழாவில் சுமார் 1,000- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். முத்துப்பேட்டையில் உலக பிரசித்திபெற்ற ஜாம்புவானோடை தர்கா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டரவரின் 720- வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தர்காவிலிருந்து, மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமாக புறப்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையங்கள், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்காவை அடைந்தது.

அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷரிபுக்கு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. முன்னதாக கொரோனா, ஒமிக்ரான் போன்ற நோய்கள் ஒழியவும், மக்கள் அனைவரும் நலமாகவும் வாழவும், கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு வளம்பெற வேண்டும் என சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1,000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: