எனது பிறந்தநாளில் ஆடம்பர கொண்டாட்டம் வேண்டாம்: கட்சியினருக்கு டிடிவி.தினகரன் கோரிக்கை

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: எனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அறிந்தேன். தாங்கள் என் மீது கொண்டிருக்கும் பாசத்திற்கும், பற்றுக்கும் தலைவணங்குகிறேன். அதே நேரத்தில், இத்தகைய கொண்டாட்டங்களில் எனக்கு எப்போதும் விருப்பமிருந்ததில்லை.

அதற்கு பதிலாக ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதையும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் முழுவதுமாக மீண்டெழ உதவுவதையும் அந்த நாளில் தாங்கள் செய்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். ஆடம்பரக் கொண்டாட்டங்களுக்கு செலவழிப்பதை விட மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பதுதான் அர்த்தமுள்ளதாக அமையும்.

Related Stories: