அமெரிக்காவை தொடர்ந்து பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை தூதரக ரீதியில் புறக்கணித்தது கனடா!!!

கனடா: அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை அடுத்து கனடாவும் பெய்ஜிங்-ல் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்-ல் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. சீனாவில் இன சிறுபான்மையிருக்கு எதிரான மனித உரிமைமீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டுகொண்டிருந்த நிலையில் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை  தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது.

ஒன்டாரியோ நகரத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். தூதரக ரீதிலான புறக்கணிப்பு என்றால் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் குறிப்பிட்ட நாடுகளின் வீரர்கள் பங்கேற்பார்கள். ஆனால் ஒலிம்பிக் சார்ந்த நிகழ்ச்சிகளில் அந்நாட்டுகளின் அதிகாரிகள் பங்கேற்கமாட்டார்கள். இதனிடையே பெய்ஜிங் குளிர்கால  ஒலிம்பிக் போட்டிகயை தூதரக ரீதியில் புறக்கணிப்பது குறித்து நியூஸிலாந்து, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.               

Related Stories: