பாலகிருஷ்ணா நிகழ்ச்சியில் மகேஷ்பாபு

ஐதராபாத்: ஆஹா ஓடிடி தளத்தில் அன்ஸ்டாபபிள் வித் என்பிகே என்ற நிகழ்ச்சியை பாலகிருஷ்ணா நடத்தி வருகிறார். இதில் பல்வேறு துறை பிரபலங்கள் கலந்துகொண்டு, தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். தங்களது துறையில் சந்தித்த வெற்றி, தோல்விகள் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாகவும் பேசுவார்கள். சினிமா துறையில் மோகன்பாபு, நானி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் மகேஷ்பாபு கலந்துகொண்டார். அப்போது தனது சினிமா அனுபவங்களை பற்றி அவர் நிறைய பேசியிருக்கிறார். வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

Related Stories:

More