சிபாரிசு செய்ய முடியாததால் தேர்தலில் எம்பிக்கள் தோல்வி: பாஜ மூத்த தலைவர் பேச்சு

புதுடெல்லி: மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது பேசிய பாஜ மூத்த தலைவர் சுசில்குமார் மோடி, ‘நாடாளுமன்ற தேர்தலில் எம்பிக்கள் தோல்வியை தழுவுவதற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கைகான ஒதுக்கீடு தான் முக்கிய காரணமாகும். மொத்தம் 788 எம்பிக்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு எம்பியும்  10 மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்காக பரிந்துரை செய்ய முடியும். எம்பிக்களுக்கு மட்டும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 7880 மாணவர்களை சேர்ப்பதற்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது குழந்தைகளை கேந்திரிய பள்ளிகளில் சேர்ப்பதற்காக சிபாரிசு செய்யும்படி கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் வெறும் 10 பேருக்கு மட்டுமே எம்பியால் சிபாரிசு செய்ய முடியும். இதனால் எம்பிக்களுக்கு எதிராக பொதுமக்கள் கோபமடைகின்றனர். அவர்கள் தேர்தலில் தோல்வி அடைவதற்கு இதுவும் மிகப்பெரிய காரணமாகும்’ என்றார்.

Related Stories: