குளித்தலை - மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை

குளித்தலை: குளித்தலை - மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய அவர் குளித்தலை - மணப்பாறை சாலையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதாக தெரிவித்தார்.

ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் மருத்துவமனைக்கு விரைவாக செல்ல முடியாமல் அண்மையில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பாரிவேந்தர் தெரிவித்தார். எனவே ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், மருத்துவமனைகளுக்கு மக்கள் விரைவாக செல்ல முடியும் என்றும் பாரிவேந்தர் விளக்கினார். மத்திய மாநில அரசுகள் இணைந்து ரயில்வே மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: