நாமக்கல் அரசு மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை-சிஇஓவிடம் பெற்றோர் புகார்

நாமக்கல் : நாமக்கல் அரசு மகளிர் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவிகளுக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று சிஇஓ அலுவலகத்துக்கு திரண்டு வந்து புகார் கொடுத்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் அரசு மகளிர்  மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியாின் பெற்றோர்கள் சிலர், நேற்று நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு திரண்டுவந்தனர்.

பின்னர் அவர்கள் சிஇஓ மகேஸ்வாியை நோில் சந்தித்து அளித்த புகார் மனு விபரம்: நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்புக்கு அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிாியர் மதிவாணன்(54), மாணவிகளிடம் கையை பிடித்து இழுப்பது, தவறான இடங்களில் தொடுவது என தொந்தரவு செய்கிறார். இதை வெளியே சொன்னால்  தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து விடுவேன் மிரட்டுகிறார்.

இதனால் மாணவிகள் மனஉளச்சல் அடைந்துள்ளனர். ஒரு மாணவி தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பிறந்த தேதியையும், இறக்கப் போகும் தேதியையும் குறிப்பிட்டு வைத்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள், இது பற்றி எங்களிடம் கூறினார்கள். இதுபற்றி மாணவியை அழைத்து விசாாித்த போது, அறிவியல் ஆசிாியாின் தகாத செயல்கள் குறித்து கூறினார். மேலும் அந்த மாணவி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். அவரை பெற்றோர் காப்பாற்றியுள்ளனர். எனவே இதுபற்றி வெளியே சொல்ல முடியாமல் பல மாணவிகள் தவிக்கிறார்கள்.

எனவே ஆசிரியர் மதிவாணனிடம் விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இவ்வாறு அந்த புகார் மனுவில் தொிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆசிாியரிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வாி, பெற்றோாிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். அரசு பள்ளி ஆசிாியர் மீது, மாணவிகளின் பெற்றோர்களே திரண்டுவந்து, சிஇஓவிடம் பாலியல் புகார் அளித்த சம்பவம், நாமக்கல்லில் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில 1,200 மாணவிகள் படித்து வருகிறார்கள். ஏழை பெற்றோாின் குழந்தைகள்தான் இங்கு அதிகம் படிக்கிறா்கள். பெண் ஆசிாியைகள் தான் இங்கு அதிகம் உள்ளனர். ஆண் ஆசிாியர்கள் குறைவாகத்தான் வேலை செய்கிறர்கள்.

கடந்த சில ஆண்டுக்கு முன் இந்த பள்ளியில பணியாற்றிய ஒரு மூத்த ஆசிாியர் மீதும் இதுபோன்ற புகார் எழுந்தது. பின்னர் அது கல்வித்துறை அதிகாாிகளால் அடக்கி வாசிக்கப்பட்டது. தற்போது மாணவியின் பெற்றோர்கள் சிஇஓ அலுவலகத்துக்கு திரண்டு வந்து புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: