நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி

சென்னை: ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா மலரஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த சசிகலா, அங்கு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், சசிகலா மற்றும் தொண்டர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி: நம் ஒப்பற்ற தலைவர்கள் காட்டிய அதே வழியில் தொடர்ந்து பயணிக்க உறுதி ஏற்போம். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, ஓர் அணியில் நின்று, ஒற்றுமையோடு இணைந்து வரும் தேர்தல் அனைத்திலும் நாம் வென்று வீறு நடைபோடுவோம். நாம் ஒன்றாக வேண்டும். கரம் கோர்ப்போம். உறுதி ஏற்போம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உயிர் மூச்சாக பாதுகாத்த அதிமுக மீண்டும் புத்துயிர் பெற ஒன்றிணைவோம். இவ்வாறு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Related Stories: