இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை, பாதுகாப்புப்படையும் பாதுகாப்பாக இல்லை: என்ன செய்கிறது உள்துறை?.. ராகுல் காந்தி கடும் தாக்கு

டெல்லி: இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை என நாகாலாந்து துப்பாக்கிச்சூடுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கோகிமா: நாகாலாந்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவல் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவரும் பலியானார். இதனால், வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. மக்கள் ஆங்காங்கே ஒன்று கூடி மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாகாலாந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாகலாந்து முதல்வர் நெபியு ரியோவிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானது இதயத்தை நெருடுகிறது. இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை; பாதுகாப்புப்படையும் பாதுகாப்பாக இல்லை. உள்துறை என்ன தான் செய்கிறது? என கேள்வி எழுப்பினார்.

Related Stories: