அருப்புக்கோட்டையில் சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் திறந்தார்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட தெற்குத் தெரு பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திற்கு புதியகட்டிடம் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் பிச்சைப்பாண்டி வரவேற்றார். புதிய கட்டிடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ விஜயக்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், திமுக இளைஞரணி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், நகர திமுக செயலாளர் மணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, ஆதிதிராவிட அணி அமைப்பாளர்சோலையப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: