மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி

திருவள்ளூர்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முகமையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி முகாம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு மகளிர் திட்ட மேலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.

இந்த பயிற்சி முகாமில் திருவள்ளூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஜீவராணி கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, `தரமான விதையின் முக்கியத் துவத்தைப்பற்றியும் விதைப்பண்ணைகளில் பிற ரக கலவன்கள் நீக்கப்பட்டு இனத்தூய்மை பராமரிக்கப்பட வேண்டும்.

நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களை விதையாக உற்பத்தி செய்வதால் விவசாயிகளுக்கு இருமடங்கு வருவாய் கிடைக்கும்’ என்றார். மேலும் மாவட்ட விதைச்சான்று அலுவலர் அபிலாஷா ேபசுகையில், `விதைப்பண்ணை அமைத்து பதிவு செய்வது, விதைப்பண்ணைகள் பதிவு செய்ய தேர்ந்தெடுக்கப்படும் வயலானது விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய தகுந்த இடமாக இருக்க வேண்டும், என்றார். இப்பயிற்சி முகாமில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்துகொண்டனர். 

Related Stories: