தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் டிசிஎஸ் நிறுவனத்துக்கு தேர்வு

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் இருந்து டிசிஎஸ் நிறுவன பணிக்குத் தேர்வான மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் மணி தலைமை தாங்கினார். கல்லூரி முதன்மை நிர்வாக அலுவலர் விஜயராஜ், முதல்வர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ஜானகிராமன் வரவேற்றார். தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து டிசிஎஸ் நிறுவனத்துக்கு தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கல்லூரியில் மாணவர்கள் 3ம் ஆண்டு படிக்கும் போதே பயிற்சி அளித்து, தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கல்லூரி மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களான காக்னிசன்ட், எச்சிஎல், டாடா, எலக்சி நிறுவனங்களுடன் உடன்படிக்கை செய்து மாணவ, மாணவிகளுக்கு நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: