அதிமுக - பாஜவிடையே கருத்து வேறுபாடு உண்டு: அண்ணாமலை பேட்டி

கோவை: கோவை அன்னூர் அருகே பாஜ தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: வேளாண் சட்டங்கள் தவறானவை கிடையாது. ஒரு விவசாயிக்கு உண்மையாகவே, அவர் விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை வேண்டும் என்றால் வேளாண் சட்டம் இன்றியமையாதது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. இந்த சட்டங்கள் வேண்டும் என விவசாயிகளே மீண்டும் கேட்பார்கள்.

அப்போது அதை கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுப்போம். அதிமுக - பாஜ கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. சில சட்டங்கள் குறித்து அதிமுகவுக்கும், பாஜவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். காரணம், அவர்களது கொள்கை வேறு, எங்களது கொள்கை வேறு.  இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Related Stories:

More