கள்ளக்குறிச்சி அருகே பொரசகுறிச்சி கிராமத்தில் பழுதடைந்த பம்பில் அருவி போல் கொட்டும் தண்ணீர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பொரசகுறிச்சி கிராமத்தில்  பழுதடைந்த பம்பில் அருவி போல் 24 மணி நேரமும் தண்ணீர் கொட்டுவதால் குடத்தை வைத்து கிராம மக்கள் தண்ணீர் நிரப்பி செல்கின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு இடங்களில் மழைநீரால் வெள்ளக்காடகவும், மேலும் ஆங்காங்கே நீரூற்றும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பொரசக்குறிச்சி கிராமத்தில் சாலையோரம் இருக்கும் அடிப்பம்பானது பழுதடைந்த நிலையிலும் அருவிபோல் 24 மணிநேரமும் தண்ணீர் கொட்டி வருகிறது. இதை கண்ட பொரசக்குறிச்சி கிராம மக்கள் ஆச்சரியத்துடனும், வீட்டு உபயோகத்திற்காகவும் மற்றும் பள்ளி மாணவர்களும் பழுதடைந்த அடி பம்பில் குடத்தை வைத்து தண்ணீரை நிரப்பி செல்கின்றனர்.

Related Stories: