சசிகலா கட்சி உறுப்பினரே கிடையாது அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு இனிமேல் வாய்ப்பே இல்லை: பொன்னையன் திட்டவட்டம்

சேலம்: முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான பொன்னையன் சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அதிமுகவின் உள்கட்சி தேர்தல் சட்டவிதிகளின்படி நடைபெறும். பொதுச்செயலாளர் வேண்டும் என யாரும் கேட்கவில்லை. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்றும் யாரும் கேட்கவில்லை. அதற்கு வாய்ப்பே இல்லை.  இவ்வாறு பொன்னையன் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் பதவி ஜெயலிதாவுக்கு மட்டும்தான். கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். இரு தலைவர்கள் வரும்போது வாழ்க என தனித்தனியாக கோஷம் எழுப்பினாலும், இறுதியில் ஒருமித்த கருத்து எடுக்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை வாங்கி விட்டோம். தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: