திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடக்கம்

திருமலை: திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்றிரவு பத்மாவதி தாயார் சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளினார். 2ம் நாளான இன்று காலை பெரியசேஷ வாகனத்தில் அருள்பாலித்தார். இன்றிரவு அன்னவாகனத்தில் எழுந்தருள்கிறார். பிரமோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் தாயார் எழுந்தருளி கோயிலுக்குள் அருள்பாலிக்க உள்ளார்.

வழக்கமாக பிரம்மோற்சவத்தின்போது தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 மாட வீதியில் பக்தர்களின் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்திற்கு மத்தியில் உலா வந்து அருள்பாலிப்பார். கொரோனா பரவல் காரணமாக 2வது ஆண்டாக இம்முறையும் வீதியுலா ரத்து செய்யப்பட்டு கோயிலுக்குள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பத்மாவதி தாயார் கோயிலில் மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: