செக் மோசடி வழக்கில் ஆஜராகாத பாலிவுட் காங். நடிகைக்கு வாரண்ட்: மத்திய பிரதேச கோர்ட் அதிரடி

போபால்: செக் மோசடி வழக்கில் ஆஜராகாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாலிவுட் நடிகைக்கு எதிராக மத்திய பிரதேச மாநிலம் வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர ேபச்சாளராகவும் பணியாற்றிய பாலிவுட் நடிகை அமிஷா படேல், அவருக்கு சொந்தமான சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனது நிறுவனத்தின் சார்பில் யுடிஎஃப் டெலி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ரூ.32.25 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

இந்தக் கடனை திருப்பி தரும் வகையில் இரண்டு தவணையாக அமிஷா படேல் தரப்பில் காசோலையாக தரப்பட்டது. ஆனால், அவர் வழங்கிய காசோலையை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றால், அந்த காசோலையின்படி குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று வங்கியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அந்த நிறுவனம், அமிஷா படேல் மற்றும் அவரது நிறுவனத்திடம் முறையிட்டது. ஆனால், அவர்கள் காசோலை விவகாரத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அதையடுத்து அமிஷா படேல் மற்றும் அவரது நிறுவனத்தின் மீது கடன் கொடுத்த நிறுவனம் சார்பில் மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், அமிஷா படேல் விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் இருந்தாார். அதையடுத்து இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அமிஷா படேலுக்கு ஜாமீன் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

வரும் டிசம்பர் 4ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், கைது வாரண்ட் பிறப்பிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, இந்தூரை சேர்ந்த தொழில் நிறுவனத்திடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கிய விவகாரத்தில் காசோலை மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: