வனப்பகுதிக்குள் ரயில் தண்டவாளம் செல்கிறது எனும் போது, குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த நவக்கரை அருகே, ஒரு தாய் யானை, இரண்டு குட்டி யானைகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் மிகவும் பரிதாபகரமானது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பாலக்காட்டில் இருந்து கோவைக்கு வரும் வழித்தடத்தில் குறிப்பிட்ட தூரம் வனப்பகுதிக்குள் ரயில் தண்டவாளம் செல்கிறது எனும் போது, குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட விதிகள் பின்பற்றப்படாமல் இருப்பதே, தொடர்ந்து யானைகள் உயிரிழப்பிற்கு காரணமாகிறது. மத்திய, மாநில வனத்துறை அமைச்சகம் இச்சம்பவத்தில் தலையிட்டு, யானைகளின் வழித்தடத்தில் இதுபோன்ற துயர சம்பவம் நிகழாதவாறு தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறினார்.

Related Stories: