மாணவிக்கு பாலியல் தொல்லை கோவை அரசு கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரி பி.பி.ஏ. துறைத்தலைவராக பணியாற்றியவர் ரகுநாதன் (42). விளாங்குறிச்சியில் வசித்து வரும் இவர், கல்லூரி மாணவி ஒருவரிடம் அத்துமீறி பேசியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக, பல்லடம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் ரகுநாதன் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் கடத்தல், மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து, அவரை கைது செய்தனர்.

பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி. கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைதான ரகுநாதனின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், மேலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரும் வகையில் போட்டோ, மெசேஜ் அனுப்பி உள்ளாரா? என பதிவுகளை சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில், கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமையில் இன்டர்னல் புகார் கமிட்டி குழு கூட்டம் நடந்தது. இதில், பேராசிரியரின் பாலியல் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் பேராசிரியர் ரகுநாதனை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories: