முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு ஐதராபாத் - சென்னை நடந்தே வந்த வாலிபர்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வரவேற்பு

கும்மிடிப்பூண்டி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டை பாராட்ட ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு நடைபயணமாக வந்த வாலிபரை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ  வரவேற்றார். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி மாவட்டம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த சேகர்(30). கொத்தனார். இவருக்கு ரமாதேவி என்ற மனைவியும், சிரண்வி என்ற மகளும் யஷ்வந்த் என்ற மகனும் உள்ளனர். சேகர், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடத்தி வரும் ஜனசேனா கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட சேகர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க ஆர்வம் கொண்டார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி சேகர் நடைபயணம் மேற்கொண்டார்.

கடந்த 10ம் தேதி காலை 6 மணியளவில் ஐதராபாத்தில் நடைபயணத்தை துவங்கிய நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தமிழக - ஆந்திர எல்லை பகுதியான எளாவூர் ஏழுகிணறு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியை வந்தடைந்தார். அப்போது அங்கு வந்திருந்த கும்மிடிப்பூண்டிக்கு எம்எல்ஏவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன், சேகரை வரவேற்று அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வின்போது, நகரச் செயலாளர் அறிவழகன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஆறுமுகம், ராகவரெட்டிமேடு ரமேஷ், நாகராஜ் உள்ளிட்ட திமுவினர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நடைபயணமாக சென்னை நோக்கி வந்த சேகரை எம்எல்ஏ அலுவலகத்தில் சிறிதுநேரம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி அவருக்கு  தேவையான வசதிகளை செய்து தந்து பின்னர் சென்னை நோக்கி வழியனுப்பி  வைத்தார்.

* தமிழகத்தில் சிறப்பான ஆட்சி

சேகர் பேசியதாவது, `தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சிறந்த முதல்வராக அவரை பார்க்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதன் மூலம் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தாலும் மேலும், ஆந்திர மக்களும் அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் ஐதராபாத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் அடங்கிய பதாகையை ஏந்தி நடைபயணம் மேற்கொண்டேன்’ என்றார்.

Related Stories: