கோவையில் பட்டப்பகலில் தொழிற்சாலையிலிருந்து விலைமதிப்பு மிக்க பொருட்களை திருடி சென்ற குழந்தைகளை வைத்து யாசகம் கேட்கும் பெண்கள்

கோவை: கோவையில் பட்டப்பகலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் தொழிற்சாலையிலிருந்து விலைமதிப்பு மிக்க பொருட்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மணியகாரம்பாளையம் பகுதியில் அப்துல் அஹிம் என்பவரின் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்கு பணிபுரியும் பணியாளர்கள் உணவு இடைவேளையின் போது தொழிற்சாலையின் நுழைவு வாயிலின் ஷட்டரை திறந்துவிட்டு சென்றுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த சில பெண்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்து பித்தளை, கன் மெட்டல் போன்ற விலையுயர்ந்த பொருட்களை திருடி சென்றனர். பட்டப்பகலில் தொழிற்சாலை கூடத்தில் யாரும் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி கொண்டு கைகளில் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொழிற்சாலை உரிமையாளர் அளித்த புகாரையடுத்து சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வரும் போலீசார் திருட்டில் ஈடுபட்டிருப்பது குழந்தைங்களை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் என்பதை கண்டறிந்துள்ளனர். விசாரணையில் ரூ.50 மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது.

Related Stories: