நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜா

சென்னை: அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் உலகப் புகழ்பெற்ற இடம். இங்கு ஒரு நாளைக்கு 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள். இங்குள்ள பல மாடி கட்டிடங்களில், பல நூறடி உயரத்தில் உலகப் புகழ்பெற்ற சாதனையாளர்கள், பிரமாண்ட விளம்பரங்கள் திரையிடப்படும். இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ஒலிபரப்பு செய்ய ஒரு செயலியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கான விளம்பரப் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த விளம்பரப் படம் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள மிக உயரமான கட்டிடத்தில் திரையிடப்பட்டது. இதை இளையராஜா தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தப் புனிதமான நாளில் இசையின் ராஜா, நியூயார்க்கில் உள்ள பில்போர்ட்ஸ் ஆப் டைம் ஸ்கொயர். ராஜா விதிகள்’ என்று பகிர்ந்துள்ளார்.

Related Stories: