புதிய அணைக்கான ஆய்வுக் குழுவில் தமிழக அதிகாரிகளை சேர்க்க வேண்டும்: கேரள அரசு கடிதம்

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட ேவண்டும் என்று கேரளா வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசின் அனுமதியின்றி புதிய அணை கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ெதரிவித்துள்ளது. ஆனாலும், புதிய அணை கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்ைல என்று ேகரள முதல்வர் பினராய் விஜயன், நீர் பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் ஆகியோர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்தும் கேரளாவை சேர்ந்த தொழில்நுட்ப குழுவில் தமிழக அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும் என, தமிழக கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனாவுக்கு கேரள நீர் பாசனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜோஸ் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால், ‘இந்த விவகாரம் குறித்து அமைச்சர்கள் மட்டத்தில்தான் முடிவெடுக்க முடியும்,’ என்று சந்தீப் சக்சேனா அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: