புதுடெல்லி: போயிங் நிறுவனத்திடம் இருந்து 72 புதிய விமானங்களை வாங்க இந்தியாவின் ஆகாசா ஏர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆகாசா ஏர் நிறுவனம் இந்தியாவில் செயல்பட ஒன்றிய அரசின் விமானப் போக்குவரத்து துறை கடந்த மாதம் தடையில்லா சான்று அளித்தது. இதனை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்ச்வாலா, இண்டிகோ முன்னாள் தலைவர் ஆதித்யா கோஷ், ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சிஇஓ வினய் துபே இணைந்து நடத்த உள்ளனர்.