சம்பளம் கேட்டவருக்கு சரமாரி அடி, உதை

சென்னை: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி குமரன் நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ் (24). கடந்த 3 மாதமாக வெற்றிவேல் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதத்துக்கான சம்பளத்தை ஜெகதீசுக்கு கொடுக்கவில்லை. இதனால் அவர் வேலையைவிட்டு நின்றுவிட்டார். நேற்று முன்தினம் ஜெகதீஸ் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வெற்றிவேலிடம் சம்பள பணத்தை தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர், வண்ணாரப்பேட்டை ஜிஏ ரோடு பகுதிக்கு வந்தால் சம்பள பணத்தை தந்துவிடுவதாக கூறியுள்ளார். அதன்படி ஜெகதீஸ் அங்கு சென்றுள்ளார்.மற்றொருவருடன் சேர்ந்து, ஜெகதீசை சரமாரியாக அடித்து, உதைத்தார். புகாரின்பேரில், ராயபுரம் போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: