பிரேசில் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன்

சா பாலோ: பிரேசில் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி நட்சத்திரம் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.சா பாலோ பந்தயக் களத்தில் நடந்த விறுவிறுப்பான போட்டியில், அபாரமாக செயல்பட்ட ஹாமில்டன் பந்தய தொலைவை (மொதம் 71 லாப்) 1 மணி, 32 நிமிடம், 22.851 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தன. ரெட் புல் ரேசிங் ஹோண்டா அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (+10.496 விநாடி) 2வது இடம் பிடித்து 18 புள்ளிகள் பெற்றார். மூன்றாவதாக வந்த வால்டெரி போட்டாஸ் (மெர்சிடிஸ்) 15 புள்ளிகளை தட்டிச் சென்றார். இதுவரை நடந்துள்ள பந்தயங்களின் முடிவில் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 332.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹாமில்டன் (318.5 புள்ளி), போட்டாஸ் (203 புள்ளி) அடுத்த இடங்களில் உள்ளனர். அடுத்து கத்தார் கிராண்ட் பிரீ (நவ. 19-21) நடைபெற உள்ளது.

Related Stories: