ஜப்பானின் பிரதமராக கிஷிடா மீண்டும் தேர்வு

டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதை தொடர்ந்து, புமியோ கிஷிடா மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஜப்பானின் பிரதமராக இருந்த சுகா, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தோல்வி அடைந்ததால் அவர் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.  எனவே, பொறுப்பேற்ற ஒரு ஆண்டுக்கு பிறகு அவர் பதவி விலகினார். இதனை தொடர்ந்து, கடந்த மாதம் ஆளும் லிபரல் கட்சி சார்பில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சரான புமியோ கிஷிடா வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் ஜப்பான் பிரதமரானார். இந்நிலையில், உடனடி அவர் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டார். மொத்தம் 465 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில், லிபரல் கட்சி 261 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, கிஷிடா நேற்று  மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories: