விலை உயர்வை எதிர்த்து 15 நாட்கள் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: விலைவாசி தொடர்ந்து உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் 15 நாட்களுக்கு காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் கேசி.வேணுகோபால் அளித்த பேட்டியில், ``மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார அழிவு, மந்தநிலை ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடுகு எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சமையல் காஸ் விலை கடந்த ஓராண்டில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 18 மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 34.38ம், டீசல் ரூ.24.38 உயர்ந்துள்ளது. 14 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 27 கோடி பேர் வறுமைக் கோட்டில் இருந்து மீண்டனர். இப்போது மோடி அரசு 23 கோடி பேரை வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளி உள்ளது,’’ என்றார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, `மோடியின் ஆட்சியே இந்திய வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆட்சி’, என்று கூறியுள்ளார்.

Related Stories: