தஞ்சை பெரிய கோயிலில் 13ம் தேதி ராஜராஜசோழனின் 1036ம் ஆண்டு சதய விழா: கொட்டும் மழையில் பந்தல்கால் நடப்பட்டது

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1036ம் ஆண்டு சதயவிழா வரும் 13ம் தேதி நடைபெறுவதையொட்டி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று கொட்டும் மழையில் நடந்தது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036ம் ஆண்டு சதய விழா வரும் 13ம் தேதி (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. காலை 7 மணியளவில் பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

பிறகு கோயில் குருக்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படும். தொடர்ந்து காலை 9மணிக்கு தருமபுரம் ஆதீனம் உபயத்தில் பெருவுடையாருக்கு 36 வகை பொருட்களால் பேரபிஷேகம் நான்கு மணி நேரம் நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள், மாமன்னர் ராஜராஜ சோழன் சிலையுடன் கோயில் பிரகாரத்திற்குள் உலா நடைபெறும். சதய விழாவையொட்டி நேற்று காலை 7 மணியளவில் கொட்டும் மழையில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: