லக்னோவில் 20, 21ம் தேதிகளில் மோடி தலைமையில் டிஜிபி.க்கள் மாநாடு: தீவிரவாதம் பற்றி முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள், ஐஜிக்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, லக்னோவில் வரும் 20, 21ம் தேதிகளில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. நாட்டின் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள், சவால்கள் குறித்து ஆலோசிக்க, அனைத்து மாநில காவல்துறை டிஜிபி.க்கள், ஐஜி.க்கள், உயரதிகாரிகள் என மொத்தம் 250 பேர் பங்கேற்கும் மாநாடு ஆண்டுதோறும் நடக்கும். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் காணொலியில் நடந்தது. இந்த ஆண்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் வரும் 20, 21ம் தேதிகளில் இந்த மாநாடு உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நடக்கிறது. இதில், அனைவரும் நேரடியாக பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கு இந்திய உளவுத்துறையான ஐபி ஏற்பாடு செய்துள்ளது.

* இந்த மாநாட்டில் ‘இணைய பயங்கரவாதம், இளைஞர்களை தீவிரமயமாக்கல், மாவோயிஸ்ட் வன்முறை போன்றவை  குறித்தும், அதை தடுக்கும் நடவடிக்கைள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

* காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் அரங்கேறும் தீவிரவாத நடவடிக்கைகள், கொரோனா தொற்றின் போது முன்களப்பணியாளர்களாக காவல்துறை ஆற்றிய சேவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

Related Stories: